பர்சனல் ஃபினான்ஸ்

நெருங்கிவிட்டது மார்ச் 31.. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் வரியை சேமிப்பது எப்படி?

Published

on

வரி செலுத்துவது இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாக இருந்தாலும், அதை சேமிக்கவும் வழிகள் உண்டு. அரசும் வரியை சேமிப்பை ஊக்குவிப்பதற்கான பல்வேறு விலக்குகளை அளிக்கிறது.

இந்த வரி விலக்குகளை முறையாக நாம் திட்டமிடுவதன் மூலம் பெற்று, வரியை சேமிக்கலாம். வருமான வரி சட்டப்பிரிவு 80சி கீழ் பிபிஎப், பங்குச்சந்தை சார்ந்த சேமிப்பு திட்டங்கள், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி, காப்பீடு போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரியை சேமிக்கலாம்.

மார்ச் 31-ம் தேதி நெருங்கி வரும் நிலையில், நிதியாண்டும் முடிகிறது. எனவே நடப்பு நிதியாண்டின் வருமானத்திலிருந்து நாம் செலுத்த வேண்டிய வரியை குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் எப்படி சேமிப்பது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

கடன் மற்றும் முதலீடுகள்

1) நீங்கள் கொடுக்கும் பணத்தை அல்லது பரிசு தொகையை, உங்கள் மனைவி பிபிஎப் அல்லது பிற வருமான வரி விலக்கு அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்து இருந்தால் அதற்கு வரி விலக்கு பெறலாம்.
2) மனைவிக்கு வட்டி இல்லா கடன் வழங்கி அதன் மூலம் வரி வருவாயைக் குறைக்கலாம்.
3) கணவன் வருமானத்தை மனைவிக்குப் பிரித்து வழங்குவதன் மூலமாக வரி வருவாயைக் குறைக்கலாம்.

குழந்தைகளின் கல்வி

1) உங்கள் பிள்ளைகளின் பெயரில் கல்வி கடன் பெற்று இருந்தால் வருமான வரி சட்டப்பிரிவு 80இ கீழ் 8 வருடங்களுக்கு வட்டி தொகையை வரி சேமிப்பாகப் பெறலாம்.
2) பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்குவதன் மூலமாகவும் வரியை குறைக்கலாம்.

பெற்றோர்களுக்கு வீட்டு வாடகை செலுத்துதல்

பெற்றோர்களுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தால், உங்களது பெற்றோருக்கு வாடகை அளித்து, அதன் மூலமாகவும் வருமான வரியை குறைக்கலாம். இப்படி செய்யும் போது அதற்கு வீட்டு வாடகை ரசீது, வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

குடும்பத்திற்காக முதலீடு செய்வது

1) பிபிஎப், யூலிப்ஸ், மியூச்சுவல் ஃபண்டு, காப்பீடு திட்டங்களில் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் பெயர்களில் முதலீடு செய்து அதற்கு வரி விலக்கு பெற முடியும்.
2) பிள்ளைகளுக்குச் சேமிப்பு கணக்கு திறந்து கொடுப்பதன் மூலம் வருமான வரி சட்டப்பிரிவு 10(32 கீழ்) அதில் வரும் வட்டி வருவாயில் ஆண்டுக்கு 1,500 ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும்.

Trending

Exit mobile version