தொழில்நுட்பம்

வாட்ஸ்ஆப்-ல் புதிய மோசடி.. பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியது என்ன?

Published

on

உலகம் முழுவதும் போன் பயன்படுத்தாத மக்களே இல்லை என்ற நிலை உருவாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போனில் அதிகளவில் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலில் OTP மூலமாக புதிய மோசடி சம்பவம் ஒன்று நடந்தேறி வருகிறது.

இந்த மோசடியில், உங்கள் நண்பர் போல ஒருவர் மேசேஜ் செய்வதும், பின்னர் தனது மொபைல் எண்ணிற்கு வர வேண்டிய ஒருமுறை கடவுச்சொல் தவறாக உங்களது மொபைல் எண்ணிற்கு வருவதாகக் கூறுவது, அந்த ஒருமுறை கடவுச்சொல்லை அளித்த உடன் அவர்களது ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டு அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் திருடப்படும் மோசடி சம்பவம் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பொதுவாக ஒருவரின் மொபைல் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லைப் பிறருக்குப் பகிரக் கூடாது. ஆனால் புதிதாக இப்படி ஒரு மோசடி நடந்துவருகிறது. எனவே ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் பயனர்களைக் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் வாட்ஸ்ஆப் செயலியை பாதுகாப்பாகப் பயன்படுத்த, இந்த இரட்டை பாதுகாப்பு முறையைப் பயன்படுத்துங்கள் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறுகின்றது.

வாட்ஸ்ஆப் செயலியில் இரட்டை பாதுகாப்பு முறையை ஆக்டிவேட் செய்வது எப்படி?

படி 1: வாட்ஸ்ஆப் செயலியில் செட்டிங்ஸ்-ஐ திறக்கவும்.
படி 2: Account > Two-step verification > Enable செய்யவும்.
படி 3: Enable செய்ய உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். தேவைப்பட்டால் மொபைல் எண்ணை உள்ளிடலாம். இல்லை என்றால் அதை தவிர்க்கலாம். ஆனால் மின்னஞ்சல் முகவரியைப் பாதுகாப்பிற்கு நல்லது.
படி 4: Next என்பதை அழுத்தவும்.
படி 5: மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்த பிறகு, சேவ் அல்லது டன் என்பதை அழுத்தவும்.

இதுபோன்ற மோசடிகள் வாட்ஸ்ஆப் தகவல்கள் திருட மட்டுமல்ல, வங்கி கணக்கில் உள்ள பணம் என பல்வேறு மோசடிகளுக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. எனவே முடிந்தவரை இந்த ஒருமுறை கடவுச்சொல்லை எந்த காரணத்துக்காகவும், யாருடனும் பகிராமல் இருப்பது நல்லது.

seithichurul

Trending

Exit mobile version