தமிழ்நாடு

டான்செட் நுழைவுத்தேர்வுக்கு பதிவு செய்வது எப்படி? முழுமையான விளக்கம்

Published

on

2022ஆம் ஆண்டுக்கான டான்செட் பதிவு மார்ச் 30 தொடங்கி, ஏப்ரல் 18 அன்று முடிகிறது என்பதையும் இந்த தேர்வுக்கு பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வமான தளமான tancet.annauniv.edu இல் பதிவு செய்து கொள்ளலாம் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு தான் டான்செட் நுழைவுத்தேர்வுக்கு பதிவு செய்வது எப்படி என்பதை படிப்படியாக தற்போது பார்ப்போம்

முதலில் அண்ணா பல்கலைகழகத்தின் அதிகாரபூர்வமான இணையதளமான tancet.annauniv.edu என்ற இணையதளத்திற்கு இணைப்பின் முகப்புப் பக்கத்தில், TANCET 2022 registration என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் தோன்றும் ஒரு புதிய பக்கத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை பிராசஸ் செய்ய வேண்டும், அதன்பின் விண்ணப்பத்துக்கான கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்திய பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பதிவு செயல்முறை செயல்முறை முடிந்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பிரின்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்.

டான்செட் 2022 நுழைவுத் தேர்வின் முக்கிய தேதிகள்:

2022 ஆம் ஆண்டுக்கான டான்செட் பதிவு தொடங்கிய தேதி: மார்ச் 30, 2022
2022 ஆம் ஆண்டுக்கான டான்செட் பதிவு முடியும் தேதி: ஏப்ரல் 18, 2022

2022 ஆம் ஆண்டுக்கான டான்செட் MCA நுழைவுத் தேர்வு தேதி: மே 14, 2022
2022 ஆம் ஆண்டுக்கான டான்செட் MBA நுழைவுத் தேர்வு தேதி: மே 15, 2022

 

seithichurul

Trending

Exit mobile version