இந்தியா

உளவு பார்க்கும் பெகாசஸ் சாப்ட்வேரில் இருந்து தப்பிப்பது எப்படி?

Published

on

தற்போது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் உளவு பார்க்கும் சாப்ட்வேர் பெகாசஸ் சாப்ட்வேரில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்தும் தொழில் நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பெகாசஸ் சாப்ட்வேர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் அனுப்பப்படுகிறது என்றும், அவ்வாறு அனுப்பப்படும் லிங்க்கை ஒருமுறை கிளிக் செய்து விட்டால் இந்த சாப்ட்வேர் தானாகவே மொபைலில் இன்ஸ்டால் ஆகிவிடும் என்றும் அதன்பின்னர் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் அந்த மொபைல் வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே தேவையில்லாமல் வரும் லிங்குகளை கிளிக் செய்யாமல் இருப்பதே பெகாசஸ் சாப்ட்வேரில் இருந்து தப்பிக்க ஒரே வழி ஆகும். ஒருவேளை இந்த சாப்ட்வேர் பாதிக்கப்பட்டு நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதை உணர்ந்தால் உடனடியாக வேறு மொபைலை மாற்ற வேண்டும் என்றும் அதை தவிர வேறு வழியே இல்லை என்றும், இந்த சாப்ட்வேரை டெலிட் செய்ய முடியாது என்றும் அப்படியே டெலிட் செய்தாலும் மீண்டும் ஹேக்கர் கையில் மொபைலின் கட்டுப்பாடு வந்துவிடும் என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் உடனடியாக அனைத்து மொபைல் செயலிகளிலும் லேட்டஸ்ட் அப்டேட் வெர்ஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் பழைய வெர்ஷன் இருக்கும் மொபைலில் தான் இந்த பெகாசஸ் சாப்ட்வேர் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும் தொழில்நுட்ப வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது புதிய வெர்சனை வெளியிடும் போது உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெகாசஸ் தாக்கப்பட்டதாக தெரிந்தால் வேறு மொபைலை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் வேறு மொபைலை மாற்றி கொண்டாலும் புதியதாக இன்ஸ்டால் செய்யும் செயலிகளுக்கு பழைய பாஸ்வேர்டுகளை வைக்காமல் புதிய பாஸ்வேர்டுகளை அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version