இந்தியா

மொபைல் எண் இல்லாமல் டூப்ளிகேட் பிளாஸ்டிக் ஆதார் கார்டு ஆர்டர் செய்வது எப்படி?

Published

on

ஆதார் கார்டு இல்லாமல் இன்று வங்கி சேவைகள், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் போன்றவற்றைப் பெற முடியாது. இப்படி பல்வேறு வகையில் பயன்படுத்தத் தேவையான இந்த ஆதார் கார்டு தொலைந்து போனால், ஆன்லைன் மூலம் புதிய ஆதார் கார்டை ஆர்டர் செய்ய முடியும். அதுவும் முன்பு போல இல்லாமல் இப்போது பிளாஸ்டிக் ஆதார் கார்டு விநியோகிக்கப்படுகிறது.

ஆனால் ஆன்லைனில் ஆதார் கார்டை ஆர்டர் செய்யும் போது அதற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவை என இருந்தது. ஆனால் இப்போது ஆதார் கார்டுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் புதிதாக மொபைல் எண்ணை பதிவு செய்து ஆதார் கார்டை ஆர்டர் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல், ஆன்லைனில் பிளாஸ்டிக் ஆதார் கார்டை ஆர்டர் செய்வது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தை (https://uidai.gov.in/) திறக்கவும்.

2) ‘My Aadhaar’ என்ற மெனுவிற்கு செல்லவும்.

3) ‘Order Aadhaar PVC Card’ என்ற தெரிவை தேர்ந்தெடுக்கவும்.

4) உங்கள் 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க மெய் நிகர் அடையாள எண்ணை உள்ளிடவும்.

5) அடுத்து கேப்ட்சா அல்லது பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டுச் சரிபார்க்கவும்.

6) அடுத்து ‘My Mobile number is not registered’ என்பதை தேர்வு செய்யவும்.

7) உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிடவும்.

8) ‘Send OTP’ என்பதை கிளிக் செய்து ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்.

9) இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI)-ன் ‘terms and conditions’-ஐ ஏற்கவும்.

10) அடுத்து Make payment’ என்பதைத் தேர்வு செய்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணையதள வங்கி சேவை அல்லது மொபைல் வாலெட் பயன்படுத்தி 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

11) பணத்தை செலுத்திய பிறகு, உங்களுக்கான பிளாஸ்டிக் ஆதார் கார்டு (PVC Aadhaar card) விநியோகிக்கப்படும். தொடர்ந்து அதன் நிலையைக் கண்டறிவதற்கான எண்ணும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

Trending

Exit mobile version