இந்தியா

ஒரு ஐபோன் இருந்தால் போதும்.. மனிதனின் உயரத்தை ஒரு நொடியில் அளக்கலாம்!

Published

on

உயரத்தை அளப்பதற்கு தற்போது இயந்திரங்கள் வந்து விட்டன என்பது ஏற்கனவே தெரிந்ததே. ஆனால் அதில் மிகத் துல்லியமான அளவுகள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.

இந்த நிலையில் தற்போது ஒரு மனிதனின் உயரத்தை ஒருசில நொடிகளில் அளக்கும் வகையிலான அம்சம் கிடைத்ததை அடுத்து பொது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது

ஐபோனில் Measure என்ற ஒரு பகுதி தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக எளிதில் மனிதனின் உயரம் மட்டுமின்றி எந்த பொருளின் உயரத்தையும் ஒரு சில நொடிகளில் அளக்க முடியும். ஐபோன் 12 புரோ உள்பட ஒரு சில மாடல்களில் மட்டும் இந்த அம்சம் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஐபோன் பின்புறத்தில் உள்ள கேமரா வரிசையில் உள்ள ஆன்போர்டு LiDAR ஸ்கேனரை பயன்படுத்தி ஒரு பொருளின் இடையிலான தூரத்தை அடையாளம் காண முடியும். ஒரு மனிதனின் உயரத்தை அளக்க வேண்டும் என்றால் அவரை நேராக நிற்க வைத்துவிட்டு ஐபோன் முன்பு நிறுவப்பட்டிருக்கும் LiDAR ஸ்கேனரை திறக்க வேண்டும். அது ஒரு நபரின் முழு உடலையும் தலை முதல் கால் வரை ஸ்கேன் செய்யும்.

அதன்பின்னர் அந்த நபரின் உயர அளவில் ஒரு கோடு தோன்றுவதை காணலாம். இந்த உயரத்தை நாம் சென்டிமீட்டர், அங்குலம், அடி என எந்த முறையில் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். இதனை தேர்வு செய்த பின்னர் உடனே உங்களுக்கு அந்த நபரின் உயரம் என்ன என்பதை பார்க்கும் அம்சம் கிடைக்கும்.

மனிதன் மட்டுமின்றி எந்த ஒரு பொருளின் உயரத்தை அளவிட வேண்டும் என்றாலும் ஒரு சில நொடிகளில் இந்த ஸ்கேனர் மூலம் அளவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயரம் என்பது மிகவும் துல்லியமாக இருக்கும் என்பதால் இந்த உயரத்தை டாக்டர் உள்பட வேறு யாரிடம் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் டேப்பில் அளந்தாலும், அல்லது இயந்திரத்தின் மூலம் அளந்தாலும் ஒரு சில மில்லிமீட்டர் மாறுபட வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஸ்கேனர் மூலம் உயரத்தை அளந்தால் மிக மிக துல்லியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version