ஆரோக்கியம்

மதுரையின் பிரசித்தி பெற்ற முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு செய்யலாம் வாங்க!

Published

on

இந்த பதிவில், மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

நாம் பல விதமான ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து சாப்பிடுகிறோம். ஆனால், மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைலில் சிக்கன் குழம்பு சாப்பிட்டிருக்கிறீர்களா? இல்லையா? அப்படியெனில், இதுவே உங்கள் பொழுதுபோக்குக்கு மிகவும் பொருத்தமான பதிவு!

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் பேஸ்ட் – 2 ஸ்பூன்
மல்லி தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

வறுத்து அரைக்க:

வரமிளகாய் – 6
மல்லி – 1 ஸ்பூன்
பச்சரிசி – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
பொட்டுக்கடலை – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 3
கசகசா – 1 ஸ்பூன்
காய்ந்த தேங்காய் – 1 ஸ்பூன்

தாளிப்பதற்கு:

கடுகு – 1/2 ஸ்பூன்
பிரியாணி இலை – 1
சோம்பு – 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2

செய்முறை:

முதலில், சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அலசிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாயில், வரமிளகாய், மல்லி, பச்சரிசி, மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, கசகசா, பொட்டுக்கடலை மற்றும் தேங்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து, பொன்னிறமாக மாறிய பின் இறக்கி கொள்ள வேண்டும்.

பின்னர், அந்த மசாலையை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பிரியாணி இலை, சோம்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு, அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு, இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து, அதன் பச்சை வாசனை சென்ற பிறகு தக்காளியை சேர்க்கவும்.

தக்காளி மசிந்த பின்பு, அதில் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, சிறிது மஞ்சள் தூள் தூவி, சிக்கனின் நிறம் மாறும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

இப்போது அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக பிரட்டி விட்டு, தண்ணீர் ஊற்றவும். அதில் உப்பு மற்றும் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர், அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக வரும் வரை கொதிக்க விடுங்கள்.

இறுதியில், மல்லி தழையை தூவி மூடி வைத்து இறக்கினால், கமகமக்கும் மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெடி!!!

Poovizhi

Trending

Exit mobile version