பல்சுவை

சுவையான கிச்சடி செய்வது எப்படி…?

Published

on

திருமண விழாக்களில் காலை உணவில் தவிர்க முடியாத ஒரு காலை உணவாகக் கிச்சடி உள்ளது. வீட்டில் செய்யும் உப்புமா பலருக்குப் பிடிக்காது என்றாலும், பலரும் கிச்சடியை விரும்பி சாப்பிடுவார்கள்.

இப்படி சுவையான கிச்சடி செய்வது என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

கிச்சடி செய்ய தேவையான பொரு‌ட்க‌ள்:

ரவை – 1/2 கிலோ
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
தக்காளி – 2
ஏலக்காய் – 2
முந்திரி – 10
வெங்காயம் – 2
கொத்துமல்லி – சி‌றிதளவு
புதினா – சி‌றிதளவு
கறிவேப்பிலை – ‌சி‌றிதளவு
பட்டை, லவுங்கம் – தலா 4
பச்சை மிளகாய் – 4 (பாதியாக நறுக்கியது)
மஞ்சள் பொடி அ‌ல்ல‌து கேச‌ரி பொடி – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – தேவை‌க்கே‌ற்ப
சோம்பு, பிரியாணி இலை – தேவை‌க்கே‌ற்ப
நெய் – தேவை‌க்கே‌ற்ப

கிச்சடி செய்முறை:

கேரட், பீன்ஸ், போன்றவற்றைச் சிறிய அளவில் நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ரவையைப் போட்டு மிதமான வெப்பத்தில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அது நன்கு சூடானதும் அதில் பட்டை, லவங்கம், முந்திரி, சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு இதில் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கப்பட்ட தக்காளி, மற்றும் பச்சை மிளகாய்களைச் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் மஞ்சள் பொடி, கறிவேப்பிலை மற்றும் வேகவைத்த காய்கறிகளையும் சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, பின்பு அதில் சரியான அளவில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும்.

நீர் நன்கு கொதிக்கும் போது அதில் தேவையான அளவில் உப்பு சேர்த்துக் கலந்து, அதனுடன் வறுக்கப்பட்ட ரவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறிய படியே இருக்க வேண்டும். சில நிமிடங்களில் நீர் வற்றி கிச்சடி கெட்டியாகிய பின்பு, அதை அடுப்பிலிருந்து இறக்கி, தேவை‌க்கே‌ற்ப நெய் சேர்த்து சிறிது கொத்தமல்லி இலைகளைத் தூவினால் சுவையான கிச்சடி தயார்.

Trending

Exit mobile version