ஆரோக்கியம்

முட்டை சாப்பிட்டு உடல் எடையைக் குறைப்பது எப்படி?

Published

on

நாம் சாப்பிடும் உணவில் முட்டை மிகவும் சத்துக்களை உடையது. முட்டையில் ப்ரோட்டின், ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன.

அதே நேரம், முட்டை உடல் எடையை குறைக்கும் நண்பனாகவும் உள்ளது. உடல் எடையைக் குறைக்க நாம் முக்கியமாகச் செய்ய வேண்டியது கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை தவிர்க வேண்டும். முட்டையை மட்டும் உணவாகச் சாப்பிட முடிவு செய்துவிட்டால், ஒரு வேலைக்கு 2 முதல் 4 முட்டைகள் வரை சாப்பிடலாம். மூன்று முட்டை சாப்பிடும் போது 240 கலோரிகள் வரை கிடைக்கும்.

காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடும் போது 300 கலோரிகள் வரை கிடைக்கும். முட்டையை எண்ணெய்யில் பொரித்துச் சாப்பிடும் போது, ஒரு டீ ஸ்பூன் எண்ணெய்க்கு 50 கலோரிகள் அதிகமாகும்.
எனவே முட்டையைச் சாப்பிட்டு உடல் எடையைக் குறைப்பதற்கான 4 வழிகள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

காலையில் முட்டையைச் சாப்பிடுதல்:
முட்டையில் அதிக ப்ரோட்டின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், காலை உணவாக முட்டையைச் சாப்பிடுவது நல்ல பயன் அளிக்கும். காலையில் முட்டையை உணவாக எடுத்துக்கொள்ளும் போது அது மாலை வர உங்களுக்கான ஆற்றலை வழங்கும்.

மதிய உணவு மற்றும் இரவு உணவில் முட்டை:
முட்டையை மட்டுமே உணவாக சாப்பிடாமல், பிறவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம். உதாரணத்துக்குக் கோதுமை பிரெட் உடன் சேர்த்து ஆம்லெட் போட்டு சாண்ட்விச் போலச் சாப்பிடலாம். ஓட்ஸ், பொஹா போன்றவற்றுடனும் முட்டையைச் சாப்பிடலாம்.

வேக வைத்த முட்டை: எண்ணெய் சேர்க்கும் போது கூடுதல் கொழுப்பு உடலில் சேரும் என்று அஞ்சுபவர்கள் வேகவைத்த முட்டையை மட்டும் சாப்பிடலாம். அதுவும் முட்டையை நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம். அதற்கும் எண்ணெய் தேவைப்படாது. அதுமட்டுமல்லாமல் வேறுவிதமான சுவையையும் முட்டை கொடுக்கும்.

முட்டையுடன் நாளை தொடங்குதல்:
முட்டையுடன் நாளை தொடங்க முடிவு செய்துவிட்டால், ஆம்லேட்டில் பச்சை கீரைகள், காய்கறிகள், கொட்டைகள் போன்றவற்றையும் சேர்த்துச் சமைத்து சாப்பிடலாம். முட்டையுடன் பச்சைக் காய்கறிகளை சேலட் போல செய்து சாப்பிடுவது அதிக ஊட்டச்சத்தை அளிக்கும்.
மேலே கூறிய வழிமுறைகள் பின்பற்றினால், முட்டையைச் சாப்பிட்டும் உங்கள் உடல் எடையை எளிமையாகக் குறைக்கலாம்.

 

Trending

Exit mobile version