வணிகம்

மங்களூர் குண்டு வெடிப்புக்கும் ஆதார் கார்டுக்கும் என்ன தொடர்பு? உங்கள் ஆதார் பயன்படுத்தி எத்தனை சிம் வாங்கப்பட்டுள்ளது?

Published

on

மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கர்நாடகா மாநில மங்களூருவில் பயணிகள் ஆட்டோ ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. அதில் பயணித்த ஆட்டோ ஓட்டுனர் பற்றும் பயணி இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி. தீவிரவாத சக்திகளுக்கு இந்த குண்டு வெடிப்புக்குத் தொடர்பு உள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து கண்டறியப்பட்ட போனில் தமிழ்நாட்டின் ஊட்டி பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரின் ஆதார் ஆர்டு பயன்படுத்தி அந்த சிம் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அந்த சிம் கார்டு சென்ற இடங்களை எல்லாம் வைத்து தேசிய புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகிறனர்.

இதுபோல உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தியும் சிம் கார்டுகள் வாங்கி மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. இதுபோல சிக்கிக்கொள்ளாமல் உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்க அனுமதி?

2018-ம் ஆண்டு தனிநபர் ஒருவரின் பெயரில் 18 மொபைல் எண்கள் வரை பெற தொலைத்தொடர்புத் துறை அனுமதி வழங்கியது. அதில் 9 நபர்கள் தனிப்பட்ட மொபைல் எண்ணிற்காகவும், 9 எண்கள் மெஷின் – மெஷின் பயன்பாட்டுக்காகவும் வாங்க முடியும்.

உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தி எத்தனை சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளது என தெரிந்துகொள்வது எப்படி?

படி 1: tafcop.dgtelecom.gov.in செல்லவும்
படி 2: மொபைல் எண்ணை உள்ளிட்டு ஒரு முறை கடவுச்சொல்லைப் பெறுங்கள்
படி 3: உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டு சரிபார்க்கவும்.
படி 4: பின்னர் உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பெறப்பட்டுள்ளது என்ற விவரங்களைப் பெற முடியும்.

ஒருவேலை இங்கு உங்களுக்கு தெரியாமல் ஏதேனும் மொபைல் எண் பயன்பாட்டில் இருந்தால் அதை அங்கு உள்ள தெரிவுகளைப் பயன்படுத்தி புகாரும் அளிக்கலாம். அதன் மூலம் அந்த மொபைல் எண்ணின் சேவை துண்டிக்கப்படும்.

உங்கள் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களுக்குப் பூட்டு போடுவது எப்படி?

படி 1: resident.uidai.net.in/biometric-lock இணைப்பிற்குச் செல்லவும்.
படி 2: ஆதார் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு ஒரு முறை கடவுச்சொல்லைப் பெறவும்.
படி 3: ஆதார் எண்ணுடன் பதிவு செய்த எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படி 4: பின்னர் உங்கள் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் பூட்டு போட ‘Enable Biometric Locking’ என்பதைத் தேர்வு செய்யவும்.

நீங்கள் இப்படி செய்வதன் மூலம் உங்கள் அதார் எண் பயோமெட்ரிக் விவரங்களை யாராலும் தவறாகப் பயன்படுத்த முடியாது.

ஆதார் மெய் நிகர் ஐடி

ஆதார் விரிச்சுவல் ஐடி எனப்படும் ஆதார் மெய் நிகர் ஐடியை ஒவ்வொரு முறை ஆதார் எண் பயன்படுத்தும் போது வழங்குவதன் மூலம் உங்கள் ஆதார் என் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version