தமிழ்நாடு

உங்கள் போன் மூலம் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

Published

on

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் ஒரு மாதத்திற்குச் சிறப்பு முகாமை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்பில், 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் போது மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதைத் தவறாகப் பயன்படுத்தும் பலர் ஒரே வீட்டிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளைப் பெற்று மோசடி செய்து வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

எனவே மின்சார வாரியத்துக்கு இதனால் ஏற்படும் இழப்பைச் சரி செய்ய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து இருந்தது. உங்கள் போன் மூலம் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

1. தமிழ்நாட்டில் வீடு இருப்பவர்கள் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணைப்பிற்குச் செல்ல வேண்டும்.

2. அங்கு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணை இணைப்பதற்கான விண்ணப்பம் வழங்கப்படும்.

3. அதில் உங்கள் மின் இணைப்பு எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு ஒரு முறை கடவுச்சொல்லைப் பெறுங்கள். ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு மின் இணைப்பு சரிபார்ப்பு செய்யப்படும்.

4. பின்னர் வீட்டில் குடியுள்ளவர்களின் விவரங்களை உள்ளிட வேண்டும்.

5. தொடர்ந்து மின் இணைப்புடன் இணைக்க வேண்டிய ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

6. ஆதாரில் உள்ளது போன்று பெயரை உள்ளிடவும்.

7. உங்கள் ஆதார் கார்டௌ புகைப்படமாக எடுத்து அதை பதிவேற்றம் செய்யவும்.

8. விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டதற்கான உறுதி சான்றைப் பெறுங்கள்.

காலக்கெடு

அனைத்து மின் இணைப்பு வாடிக்கையாளர்களும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் இணைப்பைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version