ஆரோக்கியம்

உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

Published

on

நம்மில் பலருக்கும் உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடும் பழக்கம் இருக்கும் அல்லது அப்படி ஒரு முறையாவது செய்தும் இருப்பீர்கள்.

அப்படி உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லது அல்ல என்றும், அடுத்து முறை இப்படிச் செய்ய வேண்டாம் எனவும் நினைத்து இருப்போம். எனவே நாம் இங்கு உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்பது பற்றி விளக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

உணவை ஏன் ஃபிரிட்ஜில் வைக்கிறோம்?

முதலில் உணவை நாம் ஏன் ஃபிரிட்ஜில் வைக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்வோம். உணவை ஃபிரிட்ஜில் வைக்கும் போது அதில் உள்ள உணவில் கிருமிகள் உருவாகாது. உணவைக் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ளும்.

ஒரு உணவு கெட்டுப்போவது எப்போது?

பொதுவாகச் சமைத்த உணவை 5 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸிற்குள், குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு மேல் வைத்து இருந்தால் அது கெட்டுப்போக அதிக வாய்ப்புகள் உள்ளன.

உணவுகளை எத்தனை நாட்கள் வரை பிரிட்ஜிஸ் வைத்து இருந்து சாப்பிடலாம்?

பொதுவாகச் சமைத்த உணவுகளை 3 முதல் 4 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்து இருந்து, பின்னர் சூடுபடுத்திச் சாப்பிடலாம். இறைச்சி போன்ற உணவுகளை 2 முதல் 3 நாட்களுக்கு மேல் ஃபிரிட்ஜிஸ் வைத்து இருந்து சாப்பிடுவதை தவிர்க்கலாம். அதுவே ஃப்ரீசரில் சமைத்த உணவுகளை வைப்பது என்றால் வாரக் கணக்கில் கூட வைத்து இருந்து சூடுபடுத்திச் சாப்பிடலாம்.

உணவுகளை எப்படி ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்?

நன்கு சூடுபடுத்திச் சமைத்த உணவை, அதில் உள்ள வெப்பம் வெளியேறும் வரை காத்திருந்து, 20 அல்லது 20 டிகிரி வெப்பநிலை இருக்கும் போது ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். பொதுவாகச் சமைத்த உணவை 2 மணிநேரத்திற்குள் ஃபிரிட்ஜில் வைக்கும் போது அது கெட்டுப்போவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

ஃபிரிட்ஜில் வைத்த உணவை எப்படி சூடுபடுத்த வேண்டும்?

மேலும் தேவைக்கு அதிகமான உணவு ஃபிரிட்ஜில் வைத்து உள்ளீர்கள் என்றால், அதிலிருந்து தேவையான அளவிற்கு மட்டும் எடுத்து அதனை சூடுபடுத்திப் பயன்படுத்தலாம். ஃபிரிட்ஜில் வைத்த உணவை அதே பாத்திரத்தில் சூடுபடுத்திச் சப்பிட்டுவிட்டு, மீண்டும் அதை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. மேலும் உணவை சூடுபடுத்தும் போது குறைந்த வெப்பத்திலிருந்து, சூடு ஏற ஏற வெப்பத்தை அதிகரிப்பது நல்லது. மேலும் உணவு முழுவதும் சரிசமமாக சூடாகியுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். உணவை சூடுபடுத்தும் போது அதிகபட்சம் 74 டிகிரி செல்சியஸ் வரை சூடுபடுத்தினால் நல்லது.

Tamilarasu

Trending

Exit mobile version