டிவி

பாக்கியலட்சுமி சீரியல் போல லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

Published

on

பாக்கியலட்சுமி சீரியலில் சில வாரங்களுக்கு முன்பு இனியாவின் கல்லூரி அசைன்மெண்ட் செய்வதற்காகக் கேரளா வரை ரோடு டிரிப் சென்றார்கள். அதில், கார் ரிப்பேர், ரூம் புக்கிங் குளறுபடிகள், கூட வந்தவர்களைத் தவறவிடுவது என பல்வேறு விதமான பிரச்சனைகளைக் கடந்து வந்தனர்.

இந்நிலையில் இரண்டு எபிசோடுகளாக பாக்கியாவின் டூப்ளிகேட் லைசன்ஸ் காணாமல் போக, ஒரிஜினல் லைசன்ஸை வீட்டில் இருக்கிறதா என பார்த்துப் போட்டு எடுத்து அனுப்பும் முன்பு கோபி அதனைத் திருடிச் சென்று விட, பாக்கியா போலீஸ் ஸ்டேஷன் செல்வாரா என்ன ஆகும் என பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது.

கடைசியாகப் பழனிச்சாமியிடம் கோபி தூக்கிப்போட்ட பாக்கியாவின் லைசன்ஸ் கிடைக்க, அதனை புகைப்படம் எடுத்து இனியாவிற்கு அனுப்பி பாக்கியா போலீஸ் ஸ்டேஷன் செல்வது தவிர்க்கப்பட்டது.

உங்கள் வாகனம் லைசன்ஸ் இதுபோன்று வெளியில் செல்லும் போது தொலைந்து போனால், உங்களுக்குக் கவலை ஏதும் வேண்டாம். உடனே உங்களிடம் உள்ள ஸ்மார்ட்போனில் டிஜிலாக்கர்(Digilocker) என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். அல்லது அருகில் உள்ள கணினி மையம் சென்று டிஜிலாக்கர் (https://www.digilocker.gov.in/dashboard) இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

அதில் உங்கள் ஆதார் எண், மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டுப் பதிவு செய்யுங்கள். பின்னர், உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் என்பதை கிளிக் செய்து, ஆவணங்களைப் பதிவிறக்கவும் என்பதைத் தேர்ந்தெடுத்து, மத்திய சாலை போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையைத் தேர்வு செய்து, ஓட்டுநர் உரிமத்தைப் பதிவிறக்கம் செய்து டிஜிட்டல் வடிவில் சில நிமிடங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

ஓட்டுநர் உரிமம் மட்டுமல்லாமல், பான் கார்டு, ஆதார் கார்டு, வாகன காப்பீட்டு ஆவணங்கள், ஆர்சி என அழைக்கப்படும் வாகனப் பதிவு விவரங்கள் என பலவற்றைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம். பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியா போல லைசன்ஸ் தொலைந்துவிட்டது என கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

seithichurul

Trending

Exit mobile version