இந்தியா

ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி? கட்டணம் எவ்வளவு?

Published

on

ஒன்றிய அரசு, மாநில அரசுகள் கீழ் வரும் மக்கள் நலத் திட்டங்கள், வங்கி சேவைகள் உள்பட பல்வேறுவற்றுக்கு இன்று ஆதார் கார்டு தவிற்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

பெரும்பாலான இந்தியர்கள் இப்போது ஆதார் கார்டு இல்லாமல் இல்லை. ஆனாலும் இந்த ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் சரியான நபரா என்பதை கண்டறிவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் பல ஆதார் கார்டு பயனாளிகள் புகைப்படத்தை மாற்ற வேண்டும் என நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய தனிநபர் அடையாள ஆனையம் ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்ற அனுமதி அளிக்கிறது. எனவே ஆதார் கார்டில் எளிமையாகப் புகைப்படத்தை மாற்றுவது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்ற, அருகில் உள்ள ஆதார் மையத்தை அணுக வேண்டும்.

1) ஆதார் மையத்தில் உள்ள புகைப்படத்தை மாற்றுவதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

2) உங்கள் கைரேகை ஆதார் எண்ணுடன் பொருந்துகின்றதா என்று சரிபார்த்த பிறகு, கணினி உதவியுடன் புதிதாகப் புகைப்படம் எடுக்கப்படும்.

3) புகைப்படம் எடுத்த பிறகு இந்த கோரிக்கையான ரசீது வழங்கப்படும்.

4) அந்த ரசீதில் உள்ள URN எண்ணைப் பயன்படுத்தி, புகைப்படம் மாறியுள்ளதா என்று UIDAI இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

5) புகைப்படம் மாற்றுவதற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். முன்பு இதுவே 25 ரூபாய் + ஜிஎஸ்டி என வசூலிக்கப்பட்டு வந்தது.

6) புகைப்பட மாற்றிய பிறகு, அந்த புகைப்படம் கூடிய புதிய ஆதார் கார்டை பிளாஸ்டிக் கார்டாக பெற முடியும். அதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கோரிக்கையையும் ஆதார் மையத்திலேயே அளிக்க முடியும்.

இங்கே ஆதார் கார்டு விண்ணப்பம் – கிளிக் செய்யுங்க

seithichurul

Trending

Exit mobile version