தமிழ்நாடு

அதிக மின் கட்டணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் வீடுகளில் மின் கணக்கீடுகள் எடுக்கப்படவில்லை

இதனை அடுத்து முந்தைய கணக்கீடுகளை கொண்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது என்பதும் ஒரு சிலர் தாங்களே மின் கணக்கீடு எடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி அதன்பின் மின் வாரிய அதிகாரிகள் நிர்ணயம் செய்யும் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடப்பட்டது

இந்த நிலையில் சில இடங்களில் மின் கட்டணம் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் தங்களுக்கு பல மடங்கு மின் கட்டணம் வந்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதிக மின் கட்டண புகார் குறித்து ஆய்வு செய்வதற்காக அதிகாரிகளுடன் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்கு பின் அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக கருதும் மின் நுகர்வோர்கள் 9498794987 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று கூறினார்.

அவ்வாறு புகார் அளித்தால் மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கு வந்து ஆய்வு செய்து கட்டணம் திருத்தம் செய்ய வேண்டியது இருந்தால் செய்து கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதுவரை 14 லட்சம் மின் நுகர்வோர்கள் அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை திருத்தி புதிய கட்டணத்தை செலுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

seithichurul

Trending

Exit mobile version