தொழில்நுட்பம்

உங்கள் ஜி-மெயில் கணக்கின் முகவரியைத் திருத்துவது எப்படி?

Published

on

உலகின் மிக அதிகமான நபர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை என்றால் அது ஜி-மெயிலாக தான் இருக்கும்.

இந்த ஜி-மெயில் கணக்கை பயன்படுத்துபவர்கள் எப்போதாவது, உங்கள் முகவரியைத் திருத்தம் செய்ய வேண்டும் என நினைத்து உள்ளீர்களா?

ஆனால், ஜி-மெயில் கணக்கை தொடங்கிவிட்டால் அதன் முகவரியை திருத்த முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், ஜி-மெயில் என்று அல்ல பெரும்பாலும் எந்த ஒரு மின்னஞ்சல் சேவையாக இருந்தாலும், அதன் முகவரியை ஒரு முறை உருவாக்கிவிட்டால் மீண்டும் அதனை திருத்தம் செய்ய முடியாது.

ஆனால் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு பதிலாக புதிய மின்னஞ்சல் முகவரியை உருவாக்கலாம்.

ஆண்டிராய்டு போன் மூலம் புதிய ஜி-மெயில் முகவரியை உருவாக்குவது எப்படி?

1) உங்கள் ஆண்டிராய்டு போனில் ஜி-மெயில் செயலியை திறந்து, அதில் மேலே வலது பக்கம் உள்ள Account என்ற பொத்தனை தட்டுங்கள்.
2) Google என்பதை தேர்வு செய்து Add another account என்பதை கிளிக் பண்ணுங்கள்.
3) For myself என்பதை தேர்வு செய்து, புதிய மின்னஞ்சல் முகவரியை உருவாக்குங்கள்.
4) புதிய மின்னஞ்சல் முகவரியை உருவாக்க உங்கள் பெயர் விவரங்கள், பிறந்த தேதி, பாலினம், கடவுச்சொல், மொபைல் எண் உள்ளிட்ட தேவையான முக்கிய விவரங்களை வழங்குங்கள்.
5) பின்னர் I agree என்பதை தேர்வு செய்து கூகுளின் விதிகளை ஏற்கவும்.

உங்களுக்கான புதிய ஜி-மெயில் முகவரி வெற்றிகரமாக உருவாக்கப்படும்.

ஐபோனில் புதிய ஜி-மெயில் மின்னஞ்சல் முகவரியைத் தொடங்குவது எப்படி?

1. ஐபோன் செட்டிங்ஸில் இருந்து மெயில் என்பதை தேர்வு செய்யுங்கள்.
2) பின்னர் Add Accounts என்பதை கிளிக் செய்து, கூகுள் என்பதை தேர்வு செய்து Accounts என்பதைத் தட்டவும்.
3) பின்னர் தொடருங்கள் (Continue) என்பதை தட்டுங்கள்.
4) கூகுளில் உள்நுழைவதற்கான திரை வரும். அங்கு Create Account என்பதை கிளிக் செய்யவும்.
5) மின்னஞ்சல் முகவரியை உருவாக்குவதற்கான பெயர், கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை வழங்கி, I agree என்பதை தேர்வு செய்து கூகுளின் விதிகளை ஏற்கவும்.

seithichurul

Trending

Exit mobile version