இந்தியா

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி?

Published

on

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பவர்கள் அதற்கான சான்றிதழை, கோவின் இணையதளம், ஆரோக்கிய சேது செயலி, டிஜிலாக்கர் செயலி, உமங் செயலி மூலமாக எளிமையாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

கோவின் (Cowin) இணையதளம் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

படி 1: https://www.cowin.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
படி 2: Sign In/Register என்ற பொத்தானை அழுத்தவும்.
படி 3: கொரோனா தடுப்பூசி போடும் போது அளித்த மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஒருமுறை கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும்.
படி 4: உள்நுழைந்த பிறகு கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்.

ஆரோக்கிய சேது செயலியில் கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

படி 1: உங்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டோரில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
படி 2: உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்த பிறகு, கோவின் என்பதைத் தேர்வு செய்யவும்.
படி 3: கொரோனா தடுப்பூசி தெரிவை கிளிக் செய்து பிறகு 13 இலக்க பயனாளி என்னை உள்ளிடவும்.
படி 4: கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

டிஜி லாக்கர் செயலி மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

படி 1: உங்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டோரில் டிஜி லாக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
படி 2: ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு உள்நுழையவும்.
படி 3: பதிவு செய்து உள்நுழைந்த பிறகு குடும்ப நலம் அமைச்சகம் (MoHFW) என்பதைத் தேர்வு செய்து, கொரோனா தடுப்பூசியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

உமங் ஆப் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

படி 1: உமங் செயலியில் உங்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
படி 2: உமங் செயலியில் உங்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
படி 3: உமங் செயலியில் உள்நுழைந்த பிறகு “What’s New” என்பதைத் தேர்வு செய்து கோவின் என்பதை கிளிக் செய்யவும்.
படி 4: இந்த பக்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Trending

Exit mobile version