பல்சுவை

முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி?

Published

on

முடக்கத்தான் கீரையை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொண்டால் வாய்வு தொல்லை நீங்கும். முடக்கத்தான் கீரையில் நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.

இப்படி பல்வேறு பயன்களைக் கொண்ட முடக்கத்தான் கீரை தோசையைச் செய்வது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. இட்லி அரிசி – 1 கிண்ணம்
2. முடக்கத்தான் கீரை – 1 கைப்பிடி
3. வெந்தயம் – அரை தேக்கரண்டி
4. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• அரிசி, வெந்தயம் இரண்டையும் நன்றாகக் கழுவி, 3 மணிநேரம் ஊற வைக்கவும். முடக்கத்தான் கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்து அலசி வைக்கவும்.

• பிறகு அரிசி, வெந்தயம், கீரையை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பின் உப்பு போட்டுக் கரைத்து, 8 மணிநேரம் புளிக்க வைக்கவும். மாவு புளித்ததும், தேசை ஊற்றி காரசாரமான சட்டினியுடன் பரிமாறவும்.

Trending

Exit mobile version