பர்சனல் ஃபினான்ஸ்

பிஎப் பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

Published

on

மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டமாக வருங்கால வைப்பு நிதி (ஈபிஎப்) திட்டத்தை 1952-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதற்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பும் சரிசமான பங்கினை அளிக்க வேண்டும். ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றாலும் அதை அப்படியே இணைத்துத் தொடரலாம்.

epfஎனவே நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் ஈபிஎப் உங்கள் பிஎப் கணக்கில் பணம் செலுத்துகிறதா என்பதைப் பின்வரும் வழிகளில் சேக் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

எஸ்எம்எஸ் மூலம் பிஎப் பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு யுஏஎண் எண் வழங்கப்படும். EPFOHO யுஏஎண் TAM என டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் ஈபிஎப் பேலன்ஸ் செக் செய்யலாம். TAM-க்கு பதிலாக ENG என உள்ளிட்டால் ஆங்கிலத்தில் பிஎப் பேலன்ஸ் வரும். இதுபோல பல்வேறு பிராந்திய மொழிகளிலும் பிஎப் பேலன்ஸ்-ஐ செக் செய்யலா.

மிஸ்டு கால் மூலம் பிஎப் பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

யுஏஎண் எண்ணுடன் ஆதார் எண், மொபைல் எண்ணை இணைத்துள்ளவர்கள், 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் வழங்குவதன் மூலம் பிஎப் பேலன்ஸை செக் செய்யலாம்.

ஈபிஎப் இணையதளம் மூலம் பிஎப் பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

1) https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login என்ற இணைப்பிற்குச் செல்லவும்.
2) யுஏஎண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
3) உள்நுழைந்த பிறகு எளிமையாக பிஎப் பேலன்ஸை செக் செய்யலாம்.

உமங் செயலி மூலம் பிஎப் பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து உமங் (UMANG) செயலியைப் பதிவிறக்கம் செய்து, உள்நுழைந்து யுஏஎண் மற்றும் ஒரு முறை கடவுச்சொல்லை அளிக்கும் போது பிஎப் பேலன்ஸ்-ஐ செக் செய்யலாம்.

Trending

Exit mobile version