வணிகம்

ஆன்லைனில் சிலிண்டர் புக் செய்து ரூ.500 தள்ளுபடி பெறுவது எப்படி?

Published

on

வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு, 500 ரூபாய் தள்ளுபடி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு வீட்டில் சமையல் எரிவாயு பயன்படுத்தும் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு, 14.2 கிலோ எடை கொண்ட 12 சிலிண்டர்களை மானிய விலையில் அளிக்கிறது.

இந்த சிலிண்டர்களை பேடிஎம் செயலி மூலம் புக் செய்யும் போது 500 ரூபாய் கேஷ்பேக் சலுகை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேடிஎம் செயலியில் இந்த சலுகையை டிசம்பர் 31-ம் தேதி வரை பெற முடியும்.

பேடிஎம் செயலி மூலமாக எல்பிஜி சிலிண்டர் புக் செய்வது எப்படி?

1) பேடிஎம் செயலியை திறந்து, Book Cylinder என்பதை கிளிக் செய்யவும்.
2) பாரத் கேஸ், இண்டேன், ஹெச்.பி உள்ளிட்ட உங்கள் கேஸ் இணைப்பு நிறுவனத்தைத் தேர்வு செய்யவும்.
3) உங்கள் சமையல் எரிவாயு இணைப்பின் மொபைல் எண் அல்லது இணைப்பின் பதிவு எண் அல்லது வாடிக்கையாளர்கள் எண்ணை உள்ளிட்டுத் தொடரவும்.
4) சமையல் எரிவாயு சில்லிண்டர் விலை காண்பிக்கப்படும். பே என்பதைத் தட்டவும்.
5) பணத்தைச் செலுத்தும் முன்பு, ப்ரோமோ குறியீடு உள்ளிட வேண்டிய இடத்தில் FIRSTLPG என்று பதிவிட்டால், 500 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்.

பேடிஎம் அளிக்கும் இந்த கேஷ்பேக் தொகையைப் பயன்படுத்தி, மொபைல் எண் ரீசார்ஜ், அல்லது பேடிஎம்-ன் பிற சேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சமையல் எரிவாயு புக் செய்த பிறகு, உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை டெலிவரி செய்யும் போது வழங்க வேண்டும். சிலிண்டர் புக் செய்தால் ஒருமுறை கடவுச்சொல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version