பர்சனல் ஃபினான்ஸ்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கீழ் வீட்டுக் கடன் பெறுவது எப்படி?

Published

on

நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்.

இந்த திட்டம் கீழ் நடப்பு ஆண்டில் 2.51 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 83.62 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கீழ் கடன் பெறும் பயனாளிகளை 4 வகையாகப் பிரிக்கின்றனர்.

1) பலவீனமான பிரிவினர்கள் (ரூ.3 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள்)
2) குறைந்த வருமான உள்ள பிரிவினர்கள் (6 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் உள்ளவர்கள்)
3) நடுத்தர வருமான பிரிவினர்கள் – 1
3) நடுத்தர வருமான பிரிவினர்கள் – 2

ஆண்டு வருமானம் 12 ரூபாய்க்குள் பெறுபவர்கள் நடுத்தர வருமான பிரிவினர்கள் – 1-ன் கீழ் வருவார்கள். ஆண்டு வருமானம் 12 முதல் 18 லட்சம் ரூபாய்க்குள் பெறுபவர்கள் நடுத்தர வருமான பிரிவினர்கள் – 2 கீழ் வருபவர்கள். எந்த பிரிவினர் என்பதைப் பொருத்து வீட்டின் அளவும் மாறுபடும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கீழ் வீட்டுக் கடன் பெறும் முன்பு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அதற்குத் தேவையான ஆவணங்கள், வருமான சான்றிதழ், முதலீடு, பிற கடன்கள் மற்றும் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மானியம் பெற வேண்டும் என்றால் https://pmaymis.gov.in/ இணைப்பிற்குச் சென்று தேவையான விவரங்களை அளித்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த திட்டம் கீழ் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அந்த குடும்பத்தில் யாருக்கும் சொந்தமாக வீடு இருக்கக் கூடாது. பெண் விண்ணப்பதாரர் என்றால் முன்னுரிமை வழங்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version