வணிகம்

சூயஸ் கால்வாயில் கப்பல் தரை தட்டியதால் எந்த பொருட்களுக்கு எல்லாம் தட்டுப்பாடு ஏற்படும், விலை உயரும்?

Published

on

சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ கப்பல் தரை தட்டியுள்ளது உலகம் முழுவதும் சரக்கு போக்குவரத்தையே பாதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய போக்குவரத்து பாதையாக சூயஸ் கால்வாய் இருந்து வந்தது.

கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளில் பல்வேறு பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய்

சூயஸ் கால்வாய் வழியாக அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. கிட்டத்தட்ட 5 லட்சம் பேரல்கள் வரையிலான கச்சா எண்ணெய்யை இந்தியா சூயல் கால்வாய் வழியாக இறக்குமதி செய்கிறது.

இந்தியாவைத் தொடர்ந்து சீனா, தென் கொரியா, சிங்கப்பூர், நெதர்லாந்து, பிரான்ஸ், துருக்கி, அமெரிக்கா, ஐக்கிய அமீரகம், க்ரீஸ் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. கப்பலை மீட்கக் கால தாமதம் ஆனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும், விலை உயரும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய் கறிகள், பருப்புகள் உட்பட எல்லா பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்படும்.

பிற முக்கிய பொருட்கள்

கச்சா எண்ணெய் மட்டுமல்லாமல் டாய்லெட் பேப்பர், காபி, பிட்டர்னிடூர், உடைகள், சாஸ், எஷர்கைஸ் கருவி, எலெக்ட்ரானிக்ஸ், கார் பாகங்கள் மற்றும் கார்ப்பரேட் உள்ளிட்ட பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும்.

சர்வதேச சரக்கு போக்குவரத்தில் 12 சதவீதம் வரையிலான வர்த்தகம் சூயஸ் கால்வாய் வழியில் தான் நடைபெறுகிறது. டொயாட்டா, நைக், ஹோண்டா, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் விநியோக-சங்கிலி பாதிப்பால் இந்த காலாண்டு வர்த்தகம் பெரும் அளவில் பாதிப்படையும் என்று கூறியுள்ளன. கார் உள்ளிட்ட ஆட்டோமொபைல் சாதனங்கள் விலைகள் உயரவும், பொருட்கள் தேக்கம் அடையவும் அதிக வாய்ப்புள்ளது. ஐரோப்பிய நாடுகளில் காபிக்கு தட்டுப்பாடு ஏற்படும். இவை ஒரு சாம்பிள் தான், கப்பலை வெளியில் எடுக்க தாமதமானல் பல செல்வந்தர்களின் வர்த்தகம் பெரும் அளவில் பாதிப்படையும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version