Connect with us

கிரிக்கெட்

தென் ஆப்ரிக்க தொடரால் வந்த வினை.. வசமாக சிக்கிய சிஎஸ்கே.. என்ன செய்ய போகிறார் தோனி?

Published

on

How Pakistan-south Africa series affect csk

தென் ஆப்ரிக்கா அணி வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தொடரினால் இந்தாண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா அணி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாட இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த அணி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் தென் ஆப்ரிக்கா அணிக்கு கடும் வருவாய் இழப்பும் ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய தொடர் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்ய ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் தொடர் குறித்த அறிவிப்பை தென் ஆப்ரிக்கா அணி அறிவித்துள்ளது.

அதன்படி பாகிஸ்தான் இந்த தொடரில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஏப்ரல் 2 முதல் 7 வரை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து ஏப்ரல் 10 முதல் 16 வரை 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இரண்டு அணிகளும் விளையாட உள்ளனர். இதற்காக மார்ச் 26 முதல் வீரர்கள் பயோ பபுள் விதிமுறைகளுக்குள் செல்ல உள்ளனர்.

சிஎஸ்கேவுக்கு என்ன பாதிப்பு?

ஏப்ரலில் தென் ஆப்ரிக்கா-பாகிஸ்தான் தொடர் நடைபெற உள்ளதால் ஒருவேளை ஐபிஎல் தொடர்கள் மார்ச்- ஏப்ரல் காலகட்டத்தில் நடைபெற்றால் தென் ஆப்ரிக்க வீரர்களால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் போவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. அல்லது ஏப்ரல் – மே காலகட்டத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டாலும் குறைந்தது முதல் பாதியில் தென் ஆப்ரிக்க வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்.

ஏற்கனவே சரியான ஓப்பனிங் வீரர்கள் இல்லாமல் கஷ்டப்படும் சிஎஸ்கே அணிக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் வாட்சன் – டு பிளசிஸ் ஜோடி ஓப்பனிங் களமிறங்கியது. கடைசி சில போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.

இந்த நிலையில் ஏற்கனவே வாட்சன் ஒய்வு பெற்றுள்ளார். இதனால் மற்றொரு ஓப்பனிங் வீரரான ருதுராஜ் உடன் களமிறங்க போகும் வெளிநாட்டு வீரர் யார் என்கிற கேள்வி நிலவி வந்தது. கடந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே அணியில் தொடக்கம் மிக மோசமாக இருந்தது. கடைசி போட்டிகளில் தான் ஓரளவுக்கு சரியானது.

இதனால் இந்த சீசனில் அந்த அணி ஓப்பனிங் பேட்டிங்கில் அதிக அளவில் கவனம் செலுத்தும். ரெய்னா மீண்டும் அணியில் இணைந்துள்ளதால் பெரும்பாலும் டு பிளசிஸ் மற்றும் ருதுராஜ் இணை ஓப்பனிங் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது தென் ஆப்ரிக்க வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் கலந்துகொள்ள இருப்பதால் டு பிளசிஸ் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. சிஎஸ்கே அணியில் லுங்கி நிகிடி, இம்ரான் தாஹிர், டு பிளசிஸ் என 3 தென் ஆப்ரிக்க வீரர்கள் உள்ளனர்.

இதில் லுங்கி நிகிடி, இம்ரான் தாஹிர் ஆகியோருக்கு மாற்றாக பல பவுலர்கள் உள்ளனர். ஆனால் ஓப்பனிங் பேட்ஸ்மேன் வீரர்கள் தான் குறைவாக உள்ளனர். இதனால் இந்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ள ஏலத்தில் நிச்சயம் சென்னை அணி வெளிநாட்டு வீரர் குறிப்பாக ஓப்பனிங் வீரருக்கு குறிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை போலவே அதிகம் பாதிக்கப்படக்கூடிய மற்றொரு அணி டெல்லி கேபிட்டல்ஸ். அந்த அணியில் கடந்த சீசனில் ரபடா, நொர்ஜே உள்ளிட்ட வீரர்களின் பவுலிங் தான் மிக வலிமையானதாக இருந்தது இதனால் அவர்கள் இல்லாமல் அந்த அணியும் தடுமாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்6 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!