சினிமா

நாளைக்கு எத்தனை மணிக்கு 2.0 டிரெய்லர் ரிலீஸ் தெரியுமா?

Published

on

2.0 படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 12 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என பட தயாரிப்பு நிறுவனமான லைகா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் 3டி டிரெய்லர் நாளை ரிலீசாகிறது.

400 கோடி ரூபாய்க்கும் மேல் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தியாவின் மெகா பட்ஜெட் படம் 2.0. இப்படம் இந்த மாதம் 29ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்தின் 3டி டிரெய்லர் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு ஒன் டே டு கோ என்ற இரு போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு போஸ்டரில் பறவைகள் நிறைந்த கருப்பு அறையில் நம்பர் ஒன்று தெரியும் படி கதவை திறந்து ரஜினி வருவது போன்ற ஒரு போஸ்டரும், அதே போல், அக்‌ஷய் வருவது போன்ற ஒரு போஸ்டரும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version