தமிழ்நாடு

சென்னையில் மொத்தம் எத்தனை கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது?

Published

on

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 300 முதல் 400 கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே இருந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி 826 கட்டுப்பாடு பகுதிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறி குறித்து ஊழியர்கள் கேட்டறிந்து வருகின்றனர். எந்த ஒரு தெருவில் 3 நபருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் போது கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் குறைந்த அளவிலான பாதிப்பு இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது

சென்னையில் தேனாம்பேட்டை பகுதியில் தான் அதிகமாக கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version