தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எத்தனை? சென்னையில் எவ்வளவு? முழு விபரங்கள்!

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு பகுதிகள் என பிரித்து அந்த பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி நிலவரப்படி 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்த பகுதிகள் பெரும்பாலானவை தற்போது அகற்றப்பட்டுள்ளது என்பது தமிழக மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி ஆகும்.

தமிழகத்தில் தற்போது 471 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் சென்னையில் 85 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை அடுத்து ஈரோடு பகுதியில் 46, நீலகிரியில் 43, தஞ்சாவூரில் 41, கட்டுப்படுத்த பகுதிகள் உள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்துதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், வெளியே செல்லும்போது மாஸ்க் அணிதல் ஆகியவைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வந்தால் இன்னும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version