இந்தியா

கர்நாடகாவில் முதல் 2 அலைகளை விட கொரோனா வேகமாக பரவுகிறது? சுகாதாரத் துறை அமைச்சர் அறிக்கை!

Published

on

கர்நாடகாவில் முதல் 2 அலைகளை விட 3-ம் அலையில் கொரோனா மிக வேகமாகப் பரவி வருதற்காக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே சுதாகர் வெள்ளிக்கிழமை தரவுகளை வெளியிட்டுள்ளார்.

கர்நாடகாவில் முதல் கொரோனா அலையின் போது 2 நாட்களில் தொற்று பரவல் இரட்டிப்பானது. பின்னர் இது 33 நாட்களாக அதிகரித்தது.

கொரோனா 2-ம் அலையின் போது இது 10 முதல் 8 நாட்களாக குறைந்து. தற்போது 3வது கொரோனா அலையில் 3 முதல் 5 நாட்களாக உள்ளது என தரவுகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர்.

ஜனவரி 9-ம் தேதி மொத்த கர்நாடகாவில் 12,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. அதுவே வெள்ளிக்கிழமை பெங்களூருவில் மட்டும் 20,000 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. மொத்த கர்நாடகாவில் 28,723 நபர்களுக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதித்துள்ளது.

மே 2021 2வது வாரத்தில் கர்நாடகாவில் 3 லடம் கொரோனா தொற்று பாதிப்புகள் இருந்தனர். 22 சதவீதத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதுவே 2022-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதியின் படி 62,000 நபர்கள் கொரோனா தொற்றுக்குக் கர்நாடகாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 6 சதவீதத்தினர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Trending

Exit mobile version