பல்சுவை

தாய்ப்பாலில் உள்ள சக்தி குழந்தைகளுக்கு எவ்வாறு கிடைக்கிறது?

Published

on

• பெண் ஒருவரின் சேகரிக்கப்பட்ட கொழுப்பிலிருந்து 200 கலோரிகள் பெறப்படுவதையும் பாலூட்டும் காலத்தில் உண்ணும் உணவிலிருந்து 500 கலோரிகளும் பெறப்பட வேண்டும் என்பதையும் காட்டுகிறது.

• தாய்ப்பால் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 700 கலோரிகள் தேவைப்படுகிறது. இந்த கொழுப்பானது குழந்தை பிறந்தது முதல் ஒரு சில மாதங்களுக்குத் தாய்ப்பால் உற்பத்தி செய்ய போதுமானதாக உள்ளது. கர்ப்ப காலத்தில் போதுமான உணவருந்தாத ஒரு பெண்ணின் உடலில் குறைவான கொழுப்புச் சத்து சேர்த்து வைக்கப்படுகிறது. முதல் சில மாதங்களுக்குத் தாய்ப்பால் பெறுவதற்கு இந்த அதிகப்படியான கொழுப்பு பயன்படுகிறது. ஊட்டச்சத்து குறைவாக உட்கொள்ளும் பெண்ணின் உடலில் குறைந்த அளவிலான கொழுப்பு சேகரிக்கப்படுகிறது.

• மிக குறைவான ஊட்டச்சத்து உட்கொள்ளும் தாய்மார்களுக்கு இந்த அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. சேமிக்கப்பட்ட அதிகப்படியான ஊட்டச்சத்து இருக்குமானால் தாய்ப்பால் சுரப்பதற்கு இந்த ஊட்டச்சத்துக்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு சேமிக்கப்படாத அதிகப்படியான ஊட்டச்சத்து இல்லாவிடில், அவளது உடல் திசுக்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பால் சுரக்கச் செய்ய உபயோகப்படுத்தப்படும், அதனால் பாலூட்டும் தாயின் உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும் உடல்நலமும் பாதிக்கப்படும்.

• தாய்க்கு ஊட்டச்சத்து நன்றாக இருக்கும்போது தாய்ப்பால் போதுமான அளவு சுரப்பதுடன் நல்ல தரமானதாகவும் இருக்கும், ஆனால் தாய்க்கு கடுமையான பற்றாக்குறை ஊட்டச்சத்து இருந்தால் தாய்ப்பால் சுரப்பதின் அளவு குறைகிறது. கடுமையான ஊட்டசத்துக் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட தாய்க்குக் குழந்தை அடிக்கடி உறிஞ்சிக் குடிக்கும் பொழுது 500மி.லி. தாய்ப்பால் சுரக்கிறது. நல்ல ஊட்டமாக்கத் தாயின் தாய்ப்பாலைவிட இந்த தாய்ப்பாலில் குறைந்த அளவு கொழுப்பும் உயிர்ச்சத்துக்களும் காணப்படும்.

• தாய்ப்பால் சுரப்பதற்கான ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்கும் அவளது உடலில் உள்ள திசுக்களிலிருந்து ஊட்டச்சத்துக்கள் எடுப்பதைத் தடுப்பதற்கும் பாலூட்டும் தாய் போதுமான ஊட்டச்சத்துள்ள உணவை உண்ணவேண்டும். தன் ஆரோக்கியத்திற்கும் தனது குடும்பத்தை நன்கு கவனிப்பதற்காகவும் அவளுக்கு போதுமான அளவு உணவு தேவைப்படுகிறது, பாலூட்டும் தாய் தான் வழக்கமாக உண்ணும் உணவுடன் மேலும் கூடுதலாக உண்ண வேண்டிய உணவின் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

• 500 கலோரிகள் அதிகமாகத் தரக்கூடிய உணவு வகைகள் பாலூட்டும் தாய் தினமும் உண்ண வேண்டும. இந்த உணவுகள் பல்வேறு வகைகள் உணவுகளாக இருப்பின் அதிகப்படியான புரதமும், உயிர்ச்சத்துக்களும், தாதுப்பொருட்களும் கூடுதலாகக் கிடைக்கிறது. நன்றாக உணவு அருந்தக்கூடிய தாய்மார்கள் தங்கள் பவிக்கேற்றாற் போல் நன்கு உண்ண வேண்டும. இத்தகைய தாய்மார்களுக்கு போதுமான அளவு உணவும் பல்வேறு உணவு வகைகளும் தேவைப்படுகிறது.

• ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்குத் தினசரி உணவுடன் கூடுதலான அளவு உட்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை கூறலாம். வழக்கமாகச் சாப்பிடும் உணவைவிடச் சற்று கூடுதலாக உண்ணவேண்டும் என்ற அறிவுரையை எல்லா தாய்மார்களுக்கும் அளிக்க வேண்டும். அதனை ஒரு சில மாதங்கள் மட்டும் அளிக்காமல் தாய் குழந்தைக்குத் தாய்ப்பால் அளிக்கும் கால முழுவதும் அளிக்க வேண்டும். கர்ப்ப காலத்திலும் அதற்கு முன்பும் போதுமான அளவு உணவு உட்கொள்ள வேண்டும்.

• இதனால் அந்த தாய் ஆரோக்கியமாக இருப்பதற்கும், சக்தி மற்றும் ஊட்டச்சத்துக்களைச் சேர்த்துவைப்பதற்கும் உதவுகிறது. இவ்வாறு சேர்த்துவைக்கப்பட்ட ஊட்டச்சத்து தாய்ப்பால் சுரப்பதற்குப் பயன்படுகிறது. தாய் ஆரோக்கியமாக இருக்கவும், குழந்தை போதுமான எடையுடன் ஆரோக்கியமாகப் பிறக்கவும் உதவுகிறது.

seithichurul

Trending

Exit mobile version