பல்சுவை

கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது? கொரோனா வைரஸிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

Published

on

கொரோனா வைரஸ், மட்ராஸ் ஐ நோய் போன்று கண்களில் உள்ள நீர் துளிகள், உடல் நலம் சரியில்லாதவர்கள் தும்மும் போது, இருமும் போது அவர்கள் அருகில் உள்ளவர்களுக்கு எளிதாகப் பரவும்.

எனவே உடல் நலம் சரியில்லாதவர்கள், தும்மல் மற்றும் இருமல் வருபவர்களைக் கண்டால், அவர்களிடமிருந்து 0.5 முதல் 2 மீட்டர் வரை தள்ளி இருப்பது நல்லது. இல்லையென்றால் அவர்களுக்கு ஒரு மாஸ்க் கொடுத்துப் பயன்படுத்தச் சொல்லுங்கள்.

யாருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என்று தெரியாத காரணத்தால், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைச் சிறிது காலத்திற்குத் தவிர்த்தல் நல்லது.

கொரோனா பதிக்கப்பட்டு இருந்தால் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்கள் அருகில் நாம் இருக்கும் போது வைர்ஸ் எளிதாக பரவும் வாய்ப்புகள் உண்டு. எனவே வெளியில் செல்லும் போது, எப்போதும் மாஸ்க் அணிந்துகொள்வது நல்லது.

உடல் நலக் குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்திய கப், திறந்த கதவின் கைப்பிடி, பேனா, மவுஸ், லேப்டாப், மொபைல், டிஸூ பேப்பர், கப் என அனைத்தின் மூலமாகவும் பரவ வாய்ப்புகள் உண்டு. இதுபோன்ற வற்றில் 48 மணி நேரம் வரை வைரஸ் உயிருடன் இருக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் ஜெல்களை அடிக்கடி உபயோகிக்கவும்.

இல்லையென்றால், அவற்றில் ஏதாவது ஒன்றைத் தொட்ட பிறகு, கண்ணைக் கசக்குதல் மூலமாகவும் கொரோனா வைரஸ் எளிதாக பரவிவிடும்.

கொரோனா வைரஸிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

1) சந்தேகம் வரக்கூடிய வகையில் ஏதேனும் ஒரு பொருளை நீங்கள் தொட்டு இருந்தால், அடுத்த 20 நொடிகளில் சோப்பு மற்றும் நீரை போட்டு முழங்கை வரை கழுவி விடுங்கள்.

2) கைகளைக் கழுவும் போது முழங்கை வரையில் செய்வதில் மட்டுமல்லாமல், கையின் பின்புறம், விரல்களுக்கு இடையில், நகம் இடுக்குகளில் எல்லாம் சுத்தமாகக் கழுவுங்கள்.

3) இருமல், தும்மல் வரும் போது, டிஸூ பேப்பார் பயன்படுத்திய உடன் அதை உடனே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு கைகளைச் சுத்தமாகக் கழுவி விட வேண்டும்.

4) வீட்டில் பயன்படுத்தும் கப், குளித்துவிட்டுத் துடைக்கும் டவல் போன்றவற்றை தனித்தனியாகப் பயன்படுத்துங்கள். ஒன்றையே அனைவரும் பயன்படுத்த வேண்டாம்.

5) கண், காது மற்றும் மூக்கை தொடுவதைத் தவிருங்கள்.

6) கடைசியாக, எந்த ஒரு உடல்நலக் குறைவு என்றாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version