இந்தியா

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா?

Published

on

கொரோனா ஊரடங்கு இன்னும் தொடரும் நிலையில், 2020-2021 கல்வி ஆண்டிலும் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் எப்படிக் கணக்கிடப்படும் என்று தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

10-ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளிலிருந்து, மாணவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும் போது காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களைத் தமிழக அரசு கேட்டுள்ளது. சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக முழு ஆண்டு தேர்வு நடைபெறாததால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முடிவுகள் மட்டும் கேட்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த 9-ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து எப்படி 10-ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

காலாண்டு தேர்வில் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்றால் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இரண்டு தேர்வுகளிலும் சில பாடங்களில் மாணவர்கள் தோல்வி அடைந்து இருந்தால், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version