தமிழ்நாடு

ஓசூர் எம்.எல்.ஏ மகன் கார் விபத்துக்கு தண்ணீர் பாட்டில் காரணமா?

Published

on

சமீபத்தில் ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் உள்பட 7 பேர் கார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து பல விஷயங்களை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

முதல்கட்டமாக இந்த கார் விபத்துக்கு முதல் காரணம் அதிவேகமாக கார் சென்றது தான் என்று கூறப்படுகிறது. இருப்பினும் உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்ட சொகுசு காரான ஆடி காரில் வேகமாக சென்றாலும் பிரேக் போட்டு கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு காரணம் தண்ணீர் பாட்டில் என்று தெரியவந்துள்ளது.

காரில் கீழே இருந்த தண்ணீர் பாட்டில் ஒன்று பிரேக் பெடலுக்கு அடியில் சிக்கி இருந்ததாகவும் இதனால் பிரேக் போட முடியாமல் கார் கட்டிடத்தில் மோதி உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கார் சென்ற வழியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா களையும் போலீசார் ஆய்வு செய்த போது இந்த காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் மதுக்கடைக்குள் சென்றதாகவும் அங்கிருந்து அவர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் செல்வது போன்ற காட்சியை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஏழு பேரும் ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டதாகவும், அப்போது கருணா சாகர் தான் காரை ஓட்டி உள்ளதாகவும் மற்றொரு சிசிடிவி மூலம் சென்றுள்ளது. மேலும் ஒரு உணவு டெலிவரி செய்யும் நபரை இடிப்பது போன்று கார் சென்று உள்ளது என்றும் அவர் நூலில் உயிர் தப்பியது ஒரு சிசிடிவியில் தெரிந்துள்ளது.

கருணாகரன் தோழியான பிந்து என்பவருக்கு வேலை கிடைத்ததை அடுத்து பார்ட்டி வைப்பதற்காக 7 பேர் கிளம்பி பெங்களூருக்கு சென்றதாகவும், பார்ட்டியை முடித்து விட்டு திரும்பும் போது தான் இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் கருணாசாகர் உள்பட சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் மட்டும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,

சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது இந்த விபத்துக்கு காரணம் பிரேக் பெடலுக்கு அடியில் சிக்கியிருந்த தண்ணீர் பாட்டில் என்றும், தண்ணீர் பாட்டில் சிக்கியதால் பிரேக்கை அழுத்த முடியாமல் விபத்தில் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் காரில் பயணம் செய்த ஏழு பேருமே சீட் பெல்ட் அணிய வில்லை என்றும் அதனால் இந்த காரில் அதிநவீன வசதியான ஏர்பேக் வசதி இருந்தும் சீட்பெல்ட் அணியாததால் அது திறக்கவில்லை என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version