தமிழ்நாடு

விரைவில் ஓசூர் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும்.. அனுமதி அளித்த பெங்களூரு விமான நிலையம்!

Published

on

பெங்களூரு விமான நிலையம் ஓசூர் விமான நிலையத்தில் இருந்து உதான் திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் விரைவில் சென்னை – ஓசூர் செல்ல 70 சீட் கொண்ட விமானங்கள் இயக்கப்பட்டும்.

ஒரு நகரத்தில் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு 150 கிலோ மீட்டரில் புதிய விமான நிலையத்தினை ஒன்றை அமைக்க 20 ஆண்டுகளுக்கு அனுமதி கிடையாது. எனவே தான் ஓசூரில் விமான நிலையத்தினைச் செயல்படுத்த பெங்களூரு விமான நிலையத்தின் அனுமதி தேவைப்பட்டது.

2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உதான் திட்டத்தின் முதல் கட்ட பணிகளில் ஓசூர் விமான நிலையமும் இடம் பெற்று இருந்தது.

சென்ற ஜூன் மாதம் ஓசூர் விமான நிலையத்திற்கான அனுமதியினைப் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெற்று அளிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு தென் புறத்தில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி வழியில் ஓசூர் வந்து அடையை 2 மணி நேரம் தேவைப்படும் நிலையில் ஓசூர் வந்து எலக்ர்ரானிக் செட்டி செல்வது மிகவும் எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஓசூரை அடுத்து வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் விமான நிலையங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஓசூர் விமான நிலையத்திற்கு 30 நிமிடத்தில் வந்து சேர முடியும் என்பது முக்கியச் சிறப்பம்சம் ஆகும்.

seithichurul

Trending

Exit mobile version