இந்தியா

ஆக்ஸிஜன் தீரப் போகிறது, வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து போயிடுங்க: கையை விரித்த லக்னோ ஆஸ்பத்திரி

Published

on

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கையிருப்பு தீர போவதாகவும் இதனால் நோயாளிகள் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றி கொள்ளுங்கள் என்றும் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதிலும் ஏராளமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கு முதலில் தரும் சிகிச்சையான ஆக்சிஜன் பல மருத்துவமனைகளில் பற்றாக்குறையாக உள்ளது.

இந்தியாவிலிருந்த ஆக்சிஜனை எல்லாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு தற்போது இந்திய மக்களுக்கே பற்றாக்குறையாக இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தங்கள் மருத்துவமனையில் ஆக்சிஜன் தீரப் போகிறது என்றும் உடனடியாக நோயாளிகள் தங்களுடைய உறவினரின் உதவியால் வேறு மருத்துவமனைக்கு மாற்றி கொள்ளுங்கள் என்றும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பெரும் பரபரப்பை அடைந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக் குறைக்கு உடனடியாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் மத்திய அரசு இதுகுறித்து துரிதமான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என சுப்ரீம் கோர்ட்டும் கண்டித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version