சினிமா செய்திகள்

இந்த வார பிக்பாஸில் கமல்ஹாசன்? மருத்துவமனையின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

Published

on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கமல்ஹாசன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை அடுத்து கமல்ஹாசன் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

கடந்த 22ஆம் தேதி கமலஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல்நிலை தேறி வருவதாக அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கைகளை வெளியிட்டு வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து சற்று முன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனாவில் இருந்து கமல்ஹாசன் தற்போது பூரணமாகது மீண்டு விட்டார் என்றும் இருப்பினும் அவர் டிசம்பர் 3ஆம் தேதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 4ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தன்னுடைய வழக்கமான பணிகளை தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் இந்த வாரம் டிசம்பர் 4ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version