இந்தியா

உங்களுக்கு பயன்படுத்திய ஆக்சிஜனை திருப்பி கொடுங்கள்: குணமான நோயாளிக்கு குறிப்பு எழுதிய மருத்துவமனை!

Published

on

உங்களுக்கு பயன்படுத்திய ஆக்சிஜனை திருப்பி கொடுத்து விடுங்கள் என கொரோனாவில் இருந்து குணமாக நோயாளி ஒருவருக்கு மருத்துவமனையை குறிப்பு எழுதி வைத்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலருக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் உள்ள பல மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாக்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

அந்த நோயளி குணமாகி டிஸ்சார்ஜ் செய்யும்போது மருத்துவமனை ஒரு குறிப்பை அவருக்கு கொடுத்துள்ளது. அந்த குறிப்பில் நீங்கள் குணமடைவதற்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஈடுகட்ட நீங்கள் 10 மரக்கன்றுகளை நட்டு இயற்கைக்கு அதை திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த அந்த நபர், 10 என்ன 100 மரக்கன்றுகளை நடுவேன் என்று கூறி மருத்துவமனை நிர்வாகத்தை மகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version