வார பலன்

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு வார பலன்கள் (செப். 19 – 25)

Published

on

மகரம் (செப். 19 – 25) – வார பலன்:

இந்த வாரம் மகர ராசிக்காரர்களுக்கு மனோதைரியம் கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும், பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறி விரைவான முன்னேற்றம் கிட்டும். அரசாங்க வேலைகள் சாதகமாக நடக்கும். உடல் நலத்தில் வயிறு கோளாறு ஏற்படும். பெண்களுக்கு உடல்நலனில் கவனம் தேவை. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபடுவது குடும்ப அமைதியை தரும்.

கும்பம் (செப். 19 – 25) – வார பலன்:

கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். காரியங்களில் தாமதம் ஏற்படலாம், பயம் அதிகரிக்கும். புதிய நட்புகள் உருவாகும். தொழில் வியாபாரத்தில் மெத்தனப்போக்கு நீங்க வாய்ப்பு உள்ளது. வீட்டிலும், அலுவலகத்திலும் நிம்மதி குறைவாகத் தெரியும். குடும்பத்தில் சந்தோஷத்துக்கான சிக்கல்கள் பேசுவதன் மூலம் தீர்க்கப்படும். மாணவர்களுக்கு கல்வியில் கவலை அதிகரிக்கலாம்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு பாயாசம் நிவேதனம் செய்து வணங்குவதால் எதிர்ப்புகள் அகலும்.

மீனம் (செப். 19 – 25) – வார பலன்:

மீனம் ராசிக்காரர்களுக்கு பேச்சின் இனிமை மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். சாமர்த்தியமான செயல்களால் உன்னத நிலையை அடைவீர்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் செழிப்பு உண்டாகும். பெண்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை அடைவீர்கள்.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் நலம் சீராகும்.

Poovizhi

Trending

Exit mobile version