கிரிக்கெட்

கிரிக்கெட் மைதானத்தில் ஓரினச்சேர்க்கை மோதல்!

Published

on

கிரிக்கெட்டில் எதிரணி வீரரின் மனநிலைமையை சிதைக்கும் விதமாக பேசுவது, கிண்டல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் எல்லை மீறி செயல்படும்போது அது பூதாகரமாக வெடித்து பிரச்சனையாக உருவெடுக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சாளர் கேப்ரியலுக்கும் இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டுள்ளது. அப்போது கேப்ரியல், ரூட்டை ஓரினச்சேர்க்கையைக் குறிப்பிடும்விதமாக திட்டியுள்ளார்.

அதற்கு ஜோ ரூட், இதனைக் கிண்டல் செய்யாதீர்கள். ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை என கூறியுள்ளார். ஜோ ரூட் இவ்வாறு கூறியது ஸ்டம்பில் உள்ள மைக்கில் பதிவாகியுள்ளது. ஆனால் கேப்ரியல் பேசியது மைக்கில் பதிவாகவில்லை. இதனையடுத்து போட்டியின் நடுவர்கள் தர்மசேனா மற்றும் ரோட் டாக்கர் ஆகியோர் கேப்ரியலை எச்சரித்தனர்.

கேப்ரியல் ஓரினச் சேர்க்கையாளர்களை கிண்டல் செய்யும் விதமாகப் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜோ ரூட்டின் அற்புதமான பதில் அவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டை பெற்றுத்தந்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version