அழகு குறிப்பு

குளிர்காலத்தில் தலைமுடிக்கு ஏற்படும் பிரச்சனைக்கு எளிய வீட்டுத் தீர்வு!

Published

on

மழைக்காலத்தில் தலைமுடியைப் பராமரிப்பது சற்று சவாலான விஷயம். இதை சற்று எளிமையாக்க, தலைமுடி வேர்களில் இருக்கும் எண்ணெய் தன்மையை பாதுகாப்பது முக்கியம். அந்நிலையில் கண்டிஷனர் வறட்சியை அதிகரிக்கும். எனவே இடைவெளி விட்டு கண்டிஷனர் அப்ளை செய்வது அல்லது தவிர்ப்பது நல்லது. குறிப்பாக எண்ணெய் வறட்சியை தடுக்கும்.

நரை முடியிலிருந்து தப்பிக்க:

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சரும பராமரிப்புக்கும் கடலை எண்ணெய் பயனுள்ளதாக விளங்குகிறது. கடலையில் உள்ள பாலிபீனால் ஆன்டி பயாடிக்காக செயல்படுகிறது. இது தேகத்துக்கு பளபளப்பைத் தருவதோடு இளமையை மீட்டுத் தருகிறது. தலைமுடி உதிரும் பிரச்சனை உள்ளவர்கள் ‘வைட்டமின் இ’ சத்து நிரம்பிய கடலை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் முடி வலுவடைந்து நரை விழாமல் பாதுகாக்கும்.

செம்பருத்தி:

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைப்பொடி கலந்து எண்ணெய்யில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version