இந்தியா

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப அனுமதி.. மத்திய அரசு அதிரடி!

Published

on

பணி நிமித்தமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளும் சொந்த ஊர்களுக்குத் திரும்பலாம். வெளிமாநில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வரை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்று வந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் சொந்த ஊர்களுக்குப் புலம்பெயர விரும்புபவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்து தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்படி சொந்த ஊர்களுக்குத் திரும்பினாலும், அவர்கள் தங்களை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மே 3-ம் தேதிக்குப் பிறகு போக்குவரத்து சேவைகள் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version