சினிமா செய்திகள்

கேஜிஎஃப், காந்தாரா தயாரிப்பாளரின் முதல் தமிழ் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published

on

கேஜிஎஃப், காந்தாரா படங்களை தயாரித்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், நேரடி தமிழ் படம் ஒன்றை தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதல் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளது. சிம்பு நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வேள்பாறி கதையை படமாக்க உள்ளது என செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த செய்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தாங்கள் தயாரிக்க இருக்கும் நேரடி தமிழ் படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால் அதில் சூர்யா, சிம்பு என யாரும் இல்லை. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படமாக, பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் படமாக அது உருவாக உள்ளது.

ஹொம்பாலே ஃபிளிம்ஸ் தயாரிக்கும் தமிழ் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ரகு தாதா என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. புரட்சி வீட்டில் இருந்துதான் தொடங்குகிறது எனவும் அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஃபேம்லி மேன் வெப் சீரிஸ் எழுத்தாளரான சுமன் குமார் முதல் முறையாக இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாக உள்ளது. குடும்ப, காமெடி படமாக கதை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ், எம்எஸ்ச் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளார்கள். ஷான் ரோல்டன் இசை அமைக்க உள்ளார்.

ஹொம்பாலே ஃபிளிம்ஸ் தயாரிப்பில் 2023-ம் ஆண்டு பிரபாஸ் நடித்து வரும் சலார், ஃபகத் ஃபாசில் நடித்து வரும் தூமம் படங்கள் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. விரைவில் மீண்டும் ஒரு பான் இந்தியா படத்திற்கான அறிவிப்பையும் வெளியிட உள்ளார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 14 படங்களை இந்த நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version