சினிமா செய்திகள்

தனுஷின் ஹாலிவுட் படப்பிடிப்பு தள்ளிவைப்பு!- காரணம் என்ன?

Published

on

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ‘தி க்ரே மேன்’ படத்துக்கான படப்பிடிப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் ரயான் கோஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோருடன் இணைந்து ‘தி க்ரே மேன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கான பட்ஜெட் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 21-ம் தேதி முதல் பிரம்மாண்டமாக கலிபோர்னியாவில் தொடங்க உள்ளதாம். கலிபோர்னியாவில் இதற்கென கடற்கரை ஓரம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணியும் நடந்து வருகிறதாம். இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் படப்பிடிப்பை ஒத்தி வைத்துள்ளதாம்.

இதனால் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் என்றே தயாரிப்பு நிறுவனம் கணித்துள்ளது.

Trending

Exit mobile version