தமிழ்நாடு

12ஆம் வகுப்பு விருப்பத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்: தேர்வுத்துறை அறிவிப்பு

Published

on

12ஆம் வகுப்பு விருப்பத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை ஹால்டிக்கெட் வழங்கப்படும் என தேர்வுத்துறை சற்று முன்னர் அறிவித்துள்ளது

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் தேர்வுகள் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பத்தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே தேர்வுத்துறை அறிவித்துள்ளது என்பதும் பல மாணவர்கள் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் திருப்தி இல்லாதவர்களுக்கு ஆகஸ்டு 6 முதல் 19ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும் அதே தேதியில் தனித்தேர்வு தேர்வர்களுக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி 12ஆம் வகுப்பு விருப்பத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வுத்துறையின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு சென்று மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version