தமிழ்நாடு

வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: அமைச்சர் செந்தில் பாலாஜி!

Published

on

தமிழக சட்டப்பேரவைமில் இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பெண்களுக்கான உரிமைத் தொகை முதல் அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட முன்பணம் அதிகரித்தல் வரை பல சிறப்புத் திட்டங்களை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

தமிழக பட்ஜெட்

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் முடிந்த பின்னர், மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக உள்ளது. முதலமைச்சர் கடந்த இரு வருடங்களாக கடினமாக உழைத்து, வரலாற்றில் சிறப்பு மிக்க திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கி உள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்கது

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ரூ.10,000 கோடியும், கோவை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ரூ.9,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள், புதிய திட்டங்கள்‌ மற்றும் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பட்ஜெட்டை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே சிலர் செயல்பட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முழு நிதிநிலை அறிக்கையையும் கேட்டிருக்கலாம். ஆனால், அவர் கேட்கவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அமர்ந்து விட்டு, தமிழக மக்களை ஏமாற்றியவர். ஆகவே நிதிநிலை அறிக்கையைப் பற்றி அவர் கூறியவை, மிக மிக மட்டமான கருத்துக்கள். அவர் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் இதுபோன்ற சில கருத்துக்களை கூறி உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version