சினிமா செய்திகள்

ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடிக்கும் புதிய படம்… ‘சிவக்குமாரின் சபதம்’..!

Published

on

ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடிக்கும் புதிய படத்துக்கு ‘சிவக்குமாரின் சபதம்’ எனப் பெயர் அறிவித்துள்ளனர்.

மீசையை முருக்கு என்னும் திரைப்படம் மூலம் நாயகன் ஆகவும் இயக்குநர் ஆகவும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் ஹிப்ஹாப் ஆதி. தொடர்ந்து நடிகர், இசை அமைப்பாளர், பாடகர், இயக்குநர் எனப் பன்முகத் தன்மை உடன் இயங்கி வருகிறார் ஆதி. இவர் கடைசியாக நான் சிரித்தால் என்னும் படத்தில் நாயகன் ஆக நடித்திருந்தார்.

தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில் அன்பறிவு என்னும் படத்தில் ஆதி நடித்து வருகிறார். இதனுடன் இன்று முதல் சிவக்குமாரின் சபதம் திரைப்படப் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் இந்தப் படத்தையும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

Trending

Exit mobile version