சினிமா செய்திகள்

ஹிப்-ஹாப் ஆதிக்கு நடந்த சோதனை- YouTube சேனல் ஹேக் செய்யப்பட்டது!

Published

on

நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்-ஹாப் ஆதியின் யூடியூப் பக்கம் சில மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு உள்ளது.

தனி இசைக் கலைஞராக தமிழ்ச் சமூகத்தில் அறிமுகம் ஆனவர் ஆதி. தன் ராப் இசை மூலமும், ஹிப்- ஹாப் ஸ்டைல் மூலமும் பிரபலமானார். தொடர்ந்து அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையப்பாளர்களுடன் இணைந்து பாடல்களை உருவாக்கினார். மெல்ல மெல்ல முன்னேறி திரைப்படங்களுக்கு இசையமைக்கு வாய்ப்புகளைப் பெற்றார்.

பின்னர் தானே நேரடியாக கதாநாயகனாகவும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் முதல் முறையாக ‘மீசைய முறுக்கு’ என்கிற படத்தல் நடித்தார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் படங்களில் நடித்தார். தற்போது சிவக்குமாரின் சபதல் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர அடிக்க ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டு கலக்கி வருபவர் ஆதி. அப்படி ஆதி, தன் பாடல்களை ‘ஹிப் ஹாப் தமிழா’ என்னும் யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டு வந்தார். தற்போது அந்த சேனல் ஹேக் செய்யப்பட்டு உள்ளது.

Trending

Exit mobile version