சினிமா

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

Published

on

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வரும் ஜூன் 2ம் தேதி தமிழ் சூப்பர் ஹீரோ படமாக வீரன் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே ஹீரோ படத்தின் மூலம் பேட்மேன் ஸ்டைல் சூப்பர் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஃபிளாஷ், மின்னல் முரளி ஸ்டைல் படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள வீரன் படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

#image_title

சம்மர் ஹாலிடே எல்லாம் முடிந்து பள்ளி திறக்கும் நேரத்தில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு குழந்தைகள் மத்தியில் எந்தளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனதில் இருந்தே இது மின்னர் முரளி காப்பி தான் என பலரும் கமெண்ட் போட்டு கலாய்த்து வந்த நிலையில், அதை வைத்தே ஒரு ப்ரமோஷன் வீடியோவை படக்குழுவினர் போட்டுள்ளனர்.

மரகத  நாணயம் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் வினய் வில்லனாக நடித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி வரிசையாக ஃபிளாப் படங்களை கொடுத்து வந்த நிலையில், இந்த படம் வெளியாகும் முன்பே மின்னல் முரளி காப்பி என ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், மின்னல் முரளி படத்தை இயக்கிய பசில் ஜோசப்பையே வீடியோ காலில் அழைத்து இந்த படத்தின் கதையும் மின்னல் முரளி படத்தின் கதையும் வேறு என்பதை தெளிவாக்கும் காமெடியான வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படம் நிச்சயம் ஹிப் ஹாப் ஆதிக்கு ஒரு கம்பேக் ஆக அமையுமா? அல்லது என்ன மாதிரியான ரிசல்ட் வரும் என்பது வரும் வெள்ளிக்கிழமை படம் வெளியானதும் தெரிந்து விடும்.
[youtube https://www.youtube.com/watch?v=_72qzWfyDKI]

Trending

Exit mobile version