சினிமா செய்திகள்

அன்போடும் அறிவோடும்… ஹிப் ஹாப் ஆதியின் ”அன்பறிவு”..!

Published

on

இசை அமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் புதிய படத்துக்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் புதிய படத்துக்கு ‘அன்பறிவு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹிப்ஹாப் ஆதி-க்கு ஜோடியாக நடிகை காஷ்மிரா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் விதார்த், நெப்போலியன், ஊர்வசி, சங்கீதா கிரிஷ்,  போன்ற முன்னணி நட்சத்திரங்களும் உள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வின் இயக்குகிறார்.

கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்றதொரு குடும்பப்பாங்கான ஜாலியான திரைப்படமாக அன்பறிவு இருக்கும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் முழுவதும் கிராமத்து மதுரைப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. ஆதி மதுரை மொழி நடையிலும் கிராமத்து கதாநாயகனாக இத்திரைப்படத்தில் பார்க்கலாம் என அறிமுக இயக்குநர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version