இந்தியா

மங்களூரு மசூதிக்குள்ளும் இந்து கோவிலா? பதட்டத்தை தணிக்க 144 தடை!

Published

on

ஞானவாபி மசூதி, தாஜ்மகால் ஆகியவற்றில் இந்து கோவில்கள் இருப்பதாக ஏற்கனவே பிரச்சனைகள் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது மங்களூரு மசூதிக்குள்ளும் இந்து கோவில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் ஜும்மா மஸ்ஜித் என்ற மசூதியில் புனரமைக்கும் பணியை நடைபெற்று வந்த நிலையில் அந்த மசூதிக்குள் ஒரு இந்துக் கோயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து அந்த மசூதியை ஆய்வு செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருவதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதனை அடுத்து நாளை காலை 8 மணிவரை மங்களூர் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதோடு போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது மசூதிக்குள் இந்து கோவில் போன்ற ஒரு அமைப்பு இருந்ததாக கூறப்படும் விஷயத்தில் உண்மை தன்மையை பரிசீலித்து வருகிறோம் என்றும் இது குறித்த உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட இடத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version