இந்தியா

இந்தி தேசிய மொழி: நீதிபதியின் கருத்தால் சர்ச்சை!

Published

on

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் நேஷனல் ஹெரால்ட் வழக்கை விசாரிக்கும் நீதிபதி சமர் விஷால் இந்தியை தேசிய மொழி என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீதான நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணை இன்று டெல்லி கூடுதல் மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் வழக்கை தொடர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் ராகுல், சோனியா தரப்பு வழக்கறிஞர் சீமா வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி கேள்விகளை கேட்டார். அப்போது சீமா இந்தியில் கேள்விகளை கேட்டார். இதற்கு சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் பேசுங்கள், நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலன் தான் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சமர் விஷால் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே நீதிமன்றத்தின் மொழிதான். மேலும் இந்தி தேசிய மொழி என்றார். இதனை அடுத்து மீண்டும் சுப்பிரமணியன் சுவாமியிடம் சீமா இந்தியில் கேள்வி எழுப்பினார். இதற்கு மீண்டும் ஆட்சேபம் தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, ஆங்கிலத்தில் பேசுங்கள், நான் தமிழன் என்றார். இதனையடுத்து வழக்கறிஞர் சீமா ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் இந்தி தான் தேசிய மொழி என்ற பொதுவான பார்வை உள்ளது. ஆனால் இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பது தான் உண்மை. இந்தியை விட வலுவான, சிறந்த மொழி வளம் மிக்க தமிழ் போன்ற மொழிகள் இந்தியாவில் உள்ளன. பல மொழி பேசும் மக்கள் உள்ள இந்தியாவில் இந்தி தேசிய மொழி இல்லை. மேலும் இந்தி அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல என்று ஏற்கனவே மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. இந்நிலையில் நீதிபதி இந்தியை தேசிய மொழி என கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version