இந்தியா

தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயம்: புதிய கல்விக்கொள்கையால்  சர்ச்சை!

Published

on

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக பரிந்துரைத்துள்ளனர்.

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு இது தொடர்பான வரைவு கொள்கையை தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவிடம் கொடுத்திருந்தது. இந்த குழு தயாரித்த வரைவில் மும்மொழி கல்வி கொள்கையானது தாய் மொழியுடன் இணைப்பு மொழியான ஆங்கிலம் அவற்றுடன் வேறொரு மொழியான இந்தி இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதாவது, மூன்றாவது மொழி தேர்வு, மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக எதாவது ஒரு இந்திய மொழி இருக்க வேண்டும். இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https://mhrd.gov.in என்ற இணையளத்தில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியியல் ஆய்வாளர்கள் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை nep.edu@nic.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழி என்ன என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளநிலையில் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் இருக்கும் என இந்தியை திணிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version